பிகில் திரைப்படத்தில் வந்த மகள்! கண்கலங்கிய ரோபோ சங்கர்!! (படங்கள்)

விஜய் நடிப்பில் வெளிவரவுள்ள பிகில் திரைப்படத்தில் ரோபோ சங்கரின் மகளும் நடித்துள்ளார். அண்மையில் அப் படத்தின் ட்ரெய்லர் வெளிவந்திருந்தது.

அதில் தன் மகளைப் பார்த்ததும் கண்கள் கலங்கி விட்டதாக நடிகர் ரோபோ சங்கர் தெரிவித்துள்ளார்.

பிகில் திரைப்படத்தில் பெண்கள் கால்பந்து அணிக்கு பயிற்சியாளராக விஜய் இருப்பது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அவரிடம் பயிற்சி பெறும் பெண்களில் ஒருவராக நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா நடித்துள்ளார்.

ட்ரெய்லரின் “எங்க அப்பாவும் குண்டு, எங்க அம்மாவும் குண்டு பின்ன நான் எப்படி இருப்பேன்” என்ற வசனம் மூலம் பலரது கவனத்தையும் அவர் ஈர்த்துள்ளார்.Previous Post Next Post