2020 ஆம் ஆண்டு இடமாற்றம் பெறும் அரச ஊழியர்களுக்கு முக்கிய அறிவித்தல்!

2020 ஆம் ஆண்டுக்கான இணைந்த சேவைகள் பிரிவிற்கான அலுவலர்களின் இடமாற்றம் பெறும் திகதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம் கே.வீ.பீ.எம்.ஜே. கமகே அறிவித்துள்ளார்.

அந்தவகையில் அரசாங்க சேவை ஆணைக்குழு செயலாளரினால் கடந்த 16.12.2019 ஆம் திகதிய கடிதத்தின் பிரகாரம் இணைந்த சேவைகள் பிரிவின் 2020 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றம் நடைமுறைப்படுத்தப்படும் திகதியானது எதிர்வரும் 02.03.2020 ஆம் திகதியாக மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Previous Post Next Post