5 வயதுச் சிறுவன் கிணற்றுக்குள் இருந்து சடலமாக மீட்பு!

5 வயதுச் சிறுவன் ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று நெடுந்தீவுப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

நெடுந்தீவு 11 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த மனோரஞ்சன் வித்தீஸ் (வயது-5) என்ற சிறுவனே நேற்று சடலமாக மீட்கப்பட்டான்.

நேற்று பிற்பகல் 3 மணியளவில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனைக் காணவில்லை எனப் பெற்றோர் தேடியபோது, அருகில் உள்ள கிணற்றுக்குள் சிறுவன் சடமாக மிதந்துள்ளதைக் கண்டுள்ளனர். 

சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post