இராணுவச் சிப்பாய் மீது வாள்வெட்டு! துப்பாக்கி பறிப்பு!! ஒருவர் கைது!!!

இராணுவச் சிப்பாயை வாளினால் வெட்டி விட்டு அவரிடமிருந்து பறித்துச் செல்லப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவத்திலிருந்து இடைவிலகிய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார் என்று பொலிஸ் ஊடாகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வவுனியா போகஸ்வேவா இராணுவ முகாமில் கடமையில் இருந்த சிப்பாயை வாளினால் வெட்டி விட்டு அவரிடமிருந்து துப்பாக்கியை கும்பல் ஒன்று பறித்துச் சென்றது.

இன்று காலை இடம்பெற்ற இச் சம்பவத்தில் காயமடைந்த சிப்பாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந் நிலையில் பொலிஸார் முன்னெடுத்த விசாரணையில் சிப்பாயிடம் அபகரித்துச் செல்லப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இராணுவத்திலிருந்து தப்பியோடிய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Previous Post Next Post