விமானத்தில் பெண் செய்த செயல்! அச்சத்தில் உறைந்த பயணிகள்!! (வீடியோ)

விமானத்தில் திடீரென வெடிகுண்டை வெடிக்கச் செய்யப் போவதாகத் தெரிவித்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

இஸ்தான்புல்லின் சபிஹா கோக்கென் விமான நிலையத்திலிருந்து துருக்கியின் கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு சைப்ரஸில் உள்ள எர்கன் சர்வதேச விமான நிலையத்திற்கு புறப்படத் தயாராக இருந்தது விமானம்.

அப்போது விமானத்திற்குள் கறுப்பு கண்ணாடி மற்றம் நீல நிற முக்காடு அணிந்திருந்த பெண், தான எவ்.ஈ.ரி.ஓ. இயக்கத்தைச் சேர்ந்தவர் என்று கத்தி, கோபமாக குரானைப் படித்து விமானத்தை வெடிக்கச் செய்வதாக அச்சுறுத்தினார்.

மேலும் தன்னிடம் ஐந்து வெடிகுண்டுகள் இருப்பதாக அப் பெண் பீதியை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகின்றது.

அத்துடன் சர்ச்சைக்குரிய இயக்கத்தின் பின்னணியில் உள்ள இஸ்லாமிய மதகுருவான ஃபெத்துல்லா குலனின் படத்தையும் அவர் கையில் வைத்திருந்தார்.

பின்னர் குறித்த பெண் பயணிகளால் கட்டுப்படுத்தப்பட்டு விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டார் என்று உள்ளுர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Previous Post Next Post