இராணுவச் சிப்பாய் மீது தாக்குதல் நடத்தி துப்பாக்கி பறிப்பு!

இராணுவச் சிப்பாயைத் தாக்கிய கும்பல் ஒன்று அவரிடமிருந்து துப்பாக்கியையும் பறித்துச் சென்றுள்ளது.

வவுனியா இராணுவ முகாமில் கடமையில் இருந்த இராணுவச் சிப்பாயின் துப்பாக்கியே இவ்வாறு பறித்தெடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

வவுனியா போகஸ்வோவா இராணுவ முகாமில் இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தையடுத்து இராணுவச் சிப்பாய் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.

இச் சம்பவம் தொடர்பில் இராணுவம் மற்றும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Previous Post Next Post