செங்குத்தாக நின்ற உலக்கை! சூரிய கிரகணத்தின்போது நடந்த அதிசயம்!! (வீடியோ)

நேற்றைய தினம் இலங்கை, இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் சூரிய கிரகணத்தை முழுமையாக அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

காலை 8 மணி முதல் முற்பகல் 11.19 மணி வரை பூமி, சூரியன், நிலவு ஆகியன ஒரே நேர் கோட்டில் வந்திருந்தது. இதுவே சூரிய கிரகணம் ஆகும்.

இந் நிலையில் இது தொடர்பான சில விசித்திரமான, அதிசயமான கலாசாரம் மக்கள் மத்தியில் ஆதி காலம் முதல் இருந்து வருகின்றது.

அதேநேரம் சூரியகிரகணத்தின் போது எதைச் செய்யலாம், செய்யக் கூடாது என நம் மூதாதையர்கள் சொல்லி விட்டுச் சென்றுள்ளனர்.

அந்தவகையில் அபூர்வமான சூரிய கிரகணத்தின் போது உலக்கையும் அம்மிக் கல்லும் செங்குத்தாக நிற்கும் காட்சி வைரலாகி வருகின்றது.

இந் நிலையில் கடலூரில் உள்ள வீடுகளில் கிரகணத்தின் போது உலக்கை செங்குத்தாக நிற்க வைக்கும் அற்புதத்தை மக்கள் செய்திருந்தனர்.

இதேவேளை சூரிய கிரகணம் முடிவுற்ற அதேநேரம் உலக்கையும் கீழே விழுந்து விட்டது. இது தொடர்பான வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post