கிளிநொச்சியில் விபத்து! முதியவர் நசுங்கிப் பலி!! (இரண்டாம் இணைப்பு - படங்கள்)

(இரண்டாம் இணைப்பு)
கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து கிளிநெர்சசி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

டொல்பின் ரக வாகனமும் மிதிவண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

கிளிநொச்சி 155 ஆம் கட்டைப் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற இவ் விபத்தில் மலையாளபுரம், கிளிநொச்சியைச் சேர்ந்த சின்னையை சுப்பிரமணியம் (வயது-75) என்ற முதியவரே படுகாயமடைந்தவர் ஆவார்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த டொல்பின் ரக வான், முதியவர் பயணித்த மிதிவண்டியில் மோதியதிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
பாதுகாப்பு ஊழியராகக் கடமையாற்றும் குறித்த முதியவர் பணிக்காகச் சென்று கொண்டிருந்தபோதே விபத்தில் சிக்கியுள்ளார்.

படுகாயமடைந்த அவர் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், அவர் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.


Previous Post Next Post