தொடரும் தற்கொலைகள்! முல்லைத்தீவிலும் இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை!!

கிளிநொச்சிப் பகுதியில் நேற்றைய தினம் அரச உத்தியோகத்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தில் பணியாற்றும் முரசுமோட்டையைச் சேர்ந்த ரவிச்சந்திரன் ரிதுசன் (வயது-24) என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இந் நிலையில் முல்லைத்தீவு முள்ளியவளைப் பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் நேற்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

வீட்டுக்கு அருகில் உள்ள மரம் ஒன்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முள்ளியவளை, 04 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஞானதாஸ் யூட் கிருஷாந் (வயது-24) என்ற இளைஞரே நேற்று செவ்வாய்க்கிழமை தூக்கில் தொங்கி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

சம்பவத்தைத் தொடர்ந்து உறவினர்களால் மீட்கப்பட்ட குறித்த இளைஞன் மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் அங்கு உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இளைஞனின் சடலம் மாஞ்சோலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் முள்ளியவளைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை வடக்கில் ஒரு வாரத்தில் மூன்று பேர் இவ்வாறு தங்களது உயிர்களை மாய்த்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post