குறட்டை விட்டுத் தூங்கும் அரச அலுவலர்! திடீரெனப் புகுந்து ஜனாதிபதி எடுத்த செல்பி!! (படங்கள்)

அண்மைய நாட்களாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ எவ்வித முன்னறிவித்தலுமின்றி அரசாங்க அலுவலகங்களுக்கு விஜயத்தினை மேற்கொண்டு வருகின்றார்.

அவ் அலுவலகங்களில் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் உடனடித் தீர்வினை எட்டுவதற்காகவே இக் கள விஜயம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந் நிலையில் சமூகவலைத்தளங்களில், திடீரென அலுவலகத்திற்குள் நுழைந்த ஜனாதிபதி அங்கு மேசையில் நித்திரை கொள்ளும் அரச அதிகாரியை தன்னுடன் சேர்த்து செல்பி எடுத்துக் கொண்டார் என ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றது.

ஆனால் அது உண்மையான புகைப்படம் அல்ல. அவ்வாறு ஜனாதிபதி செல்பியும் எடுத்துக் கொள்ளவில்லை. குறித்த புகைப்படத்தின் உண்மையான புகைப்படம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.


Previous Post Next Post