மானிப்பாயில் ரவுடிகள் அட்டகாசம்! வீட்டுப் பொருட்கள் அடித்துடைப்பு!! (படங்கள்)

மானிப்பாய்ப் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த இனந்தெரியாத நபர்கள் அங்கிருந்த பொருட்களை அடித்துச் சேதப்படுத்தியுள்ளது.

மானிப்பாய் கட்டுடை அரசடி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக உள்ள வீடொன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு புகுந்த இனந்தெரியாத நபர்கள் வீட்டில் இருந்த பெறுமதி வாய்ந்த பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிளையும் அடித்து உடைத்து சேதமாக்கியது.

இந்த வீட்டிற்கு அருகில் இருந்த பாழடைந்த கட்டடம் ஒன்றினுள் சந்தேகத்திற்கிடமான கும்பல் வந்து செல்வதாகவும் அவர்கள் போதைப் பொருள் பாவனை உள்ளிட்ட சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டமையால் அந்தக் கும்பலை அங்கிருந்து அகற்றும் நோக்குடன் வீட்டு உரிமையாளருடன், அருகில் வசிப்பவர்களுமாக இணைந்து அந்தக் கட்டடத்தை இடித்து அழித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்தே அந்தக் கும்பல் இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டமையை அடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை நேற்றைய தினம் காலை யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் யாழ்ப்பாணத்தில் ஆறு வாள்வெட்டுக் குழுக்கள் இயங்குவதாகவும் அவற்றை அடக்கும் பணி நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் புதுவருடத்திற்கு முன்னர் முற்றாக அடக்குவோம் என யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்த நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post