தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட அரசங்க உத்தியோகத்தர்! (படங்கள்)

கிளிநொச்சியில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தில் முகாமைத்துவ உதவியாளராகக் கடமையாற்றும் இளைஞன் ஒருவர் இன்று தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ரவிச்சந்திரன் ரிதுசன் (வயது-24) என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்கள் ஆவார்.

வீட்டிலிருந்தவர்கள் காலையில் வேலைக்களுக்காக வெளியில் சென்று இரண்டு மணியளவில் வீடு திரும்பிய போதே இளைஞன் தூக்கில் தொங்கியிருப்பதைக் கண்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களில் கிளிநொச்சிப் பகுதியில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post