புதிய கடவுச்சீட்டுக்களில் இனி தாமரைச் சின்னம்! எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!!

இந்தியாவின் புதிய கடவுச்சீட்டுக்களில் தாமரைச் சின்னம் அச்சிடப்பட்டுள்ளமைக்கு மக்களவையில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக கடும் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் இது குறித்து வெளியுறவுச் செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் விளக்கமளிக்கையில்,

பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டு மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தாமரைச் சின்னம் நமது நாட்டு தேசிய மலர். அதேபோல் தேசிய விலங்கு, தேசிய பறவை என ஒவ்வொரு தேசிய சின்னமும் சுழற்சி முறையில் கடவுச்சீட்டில் இடம்பெறும்.

மேலும் சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பின் வழிகாட்டு நெறிகளின்படி இந்தப் பாதுகாப்பு அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றார். 

Previous Post Next Post