பிளாஸ்ரிக் குடிநீர் போத்தல்களுக்குத் தடை விதித்தார் ஜனாதிபதி!

சுற்றுச்சூழலுக்குத் தாக்கத்தை ஏற்படுத்துவதாகத் தெரிவித்து ஜனாதிபதி செயலகத்திற்குள் நாளாந்தம் நடக்கும் கலந்துரையாடல்களுக்கு பிளாஸ்ரிக் போத்தல்களில் குடிநீர் வழங்க  ஜனாதிபதி தடை விதித்துள்ளார்.

இக் கலந்துரையாடல்களில் பங்குபற்றுபவர்களின் பாவனைக்காகப் பிளாஸ்ரிக் குடிநீர்ப் போத்தல்கள் வழங்குவது நீண்ட காலமாக இடம்பெற்று வந்தது.

இதனால் ஏற்படக் கூடிய பாரதூரமான சுற்றாடல் தாக்கங்கள் தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி குடிநீர் போத்தல்கள் வழங்குவதைத் தடை செய்து அதற்குப் பதிலாக கண்ணாடிக் குவளைகளில் நீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை எதிர்வரும் காலங்களில் அரச நிறுவனங்களிலும் இந்த நடைமுறையை பின்பற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post Next Post