வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் போதையில் அட்டகாசம்! பலர் மீது வாள்வெட்டு!! (வீடியோ)

செங்கலடிப் பகுதியில் மதுபோதையில் வந்த சிலரால் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு தாக்குதல் நடத்தியவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனின் ஆதரவாளர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந் நிலையில் தாக்குதலுக்கு இலக்கான நபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர்கள் மதுபோதையில் அட்டகாசம் புரிந்துள்ளதாகவும் அங்கிருந்தவர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவ இடத்துக்கு வந்த ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post