மாணவியைக் கொலை செய்தது அவரது கணவர்! கள்ளத் தொடர்பு காரணமாம்?

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட சிங்கள மாணவியான கொழும்பு பேருவளையைச் சேர்ந்த ரோசினி ஹன்சனா (வயது-29) என்பவரைக் கொலை செய்தது அவரது கணவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொல்லப்பட்ட மாணவிக்கும் கொலையாளியான இராணுவச் சிப்பாய்க்கும்  நான்கு வருடங்களுக்கு முன்னர் பதிவுத் திருமணம் இடம்பெற்றுள்ளது என்று ஆரம்ப கட்ட விசாரணைகளின் பின்னர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வேறு நபர் ஒருவருடன் சேர்ந்து எனது மனைவி எடுத்துக் கொண்ட ஒளிப்படங்கள் சில கிடைத்தன. அவை தொடர்பில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டினால்தான் அவரைக் கொலை செய்தேன் என்று கொலையாளி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் கொல்லப்பட்ட மாணவி இன்னும் ஒரு மாதத்தில் இடம்பெறவிருந்த மருத்துவத்துறை இறுதிப் பரீட்சைக்குத் தோற்றவிருந்தார் என்று யாழ்.பல்கலைக்கழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Previous Post Next Post