புங்குடுதீவில் பெண்களால் நடத்தப்படும் நடமாடும் மதுபானசாலை! (வீடியோ)

புங்குடுதீவுப் பகுதியில் பல்வேறுபட்ட சட்டவிரோதமான செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக வேலணை பிரதேச சபையின் பெண் உறுப்பினர் அனுசியா ஜெயகாந் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சட்டவிரோத செயற்பாடுகள் பற்றிய கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

புங்குடுதீவில் நடமாடும் மதுபானசாலைகள் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. மோட்டார் சைக்கிளுக்குள் மறைத்து வைத்தும் இடுப்பில் மறைத்து வைத்தும் இவ்வாறு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இவ்வாறான செயற்பாடுகளில் அப் பகுதிகளில் உள்ள பெண்களும் ஈடுபட்டு வருகின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.
Previous Post Next Post