பல்கலைக்குத் தெரிவான மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு!

முல்லைத்தீவு மூங்கிலாறுப் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டையிழந்து மின் கம்பத்துடன் மோதியதிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் மீட்கப்பட்டு புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு மூங்கிலாறு பகுதியைச் சேர்ந்த ஆனந்தராசா பிரசன்னா (வயது-24) என்ற இளைஞரே உயிரிழந்தவர் ஆவார்.

குறித்த இளைஞன் முகாமைத்துவ பீடத்துக்கு பெரதெனிய பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post