கிளிநொச்சியில் மனைவியைக் கொலை செய்தது ஏன்? வீடியோ வெளியிட்ட கணவன்!! (வீடியோ)

கிளிநொச்சிப் பகுதியில் மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவன், தான் அதனை ஏன் செய்ததாகத் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மயில்வாகனபுரம் கிராமத்தில் கடந்த சனிக்கிழமை அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது.

இதன்போது குறித்த நபர் மனைவியை வெட்டிக் கொலை செய்து விட்டு அதனைத் தடுக்க வந்த மனைவியின் சகோதரியையும் வெட்டிய பின் தானும் கழுத்தறுத்து தற்கொலை செய்ய முற்பட்டிருந்தார்.

இந்நிலையில் மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவர் வெளியிட்டுள்ள காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

கொலை செய்தமைக்கான காரணத்தை குறித்த காணொளியில் அந்த இளைஞர் வெளியிட்டுள்ளார்.
Previous Post Next Post