ஜேர்மனியில் சற்றுமுன் துப்பாக்கிச் சூடு! ஆறு பேர் உயிரிழப்பு!! பலர் காயம்!!!

ஜேர்மனியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தென்மேற்கு ஜேர்மனிய நகரமான ரொட் ஆம் சீ   பகுதியில் சற்றுமுன்னர் இந்தத் தாக்குல் இடம்பெற்றுள்ளது. ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ஒரு கட்டடத்தில் சந்தேகநபர் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலுக்கமைய அவர் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் குறிப்பிட்டனர்.

சந்தேகநபருக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்குமிடையில் தொடர்பு இருப்பதாக ஆரம்ப விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபரை தவிர்த்து துப்பாக்கிச் சூட்டில் வேறு எவரும் ஈடுபட்டதாக ஆதாரம் இல்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் சந்தேகநபரின் குடும்ப உறுப்பினர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

Previous Post Next Post