மதுபோதையில் பஸ் செலுத்திய சாரதிக்கு அமைச்சர் வழங்கிய தண்டனை! (வீடியோ)

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தை செலுத்திச் சென்ற சாரதி மதுபோதையில் இருந்தமை தொடர்பில் கண்டறியப்பட்ட நிலையில் அவரை சேவையிலிருந்து உடனடியாக நீக்குமாறு அமைச்சர் மகிந்த அமரவீர பணித்துள்ளார்.

யாழ்ப்ப்பாணத்திலிருந்து அக்ரைப்பற்றுக்கு கடந்த புதன்கிழமை இரவு 7.45 மணியளவில் புறப்பட்ட பேருந்து நாவற்குழி சோதனைச் சாவடியில் இராணுவம் மற்றும் பொலிஸாரினால் மறிக்கப்பட்டு சோதனையிடப்பட்ட போது சாரதி மதுபோதையில் இருந்தமை கண்டறியப்பட்டது.

யாழ்ப்பாணம் கோண்டாவில் சாலையில் பணியாற்றும் சாரதியே இவ்வாறு மதுபோதையில் பேருந்தைச் செலுத்திய நிலையில் அவரைப் பணிநீக்கம் செய்ய அமைச்சர் பணித்துள்ளார்.

இது தொடர்பில் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சின் செயலாளருக்கும் அமைச்சர் இன்று இந்தத் தகவலை வழங்கியுள்ளார்.

தொடர்புபட்ட செய்தி:- யாழில் மதுபோதையில் பயணித்த இ.போ.ச. பஸ் சாரதி! 46 பயணிகள் அருந்தப்பு!! 
Previous Post Next Post