புத்தாண்டில் நடந்த துயரம்! கிளிநொச்சி விபத்தில் இரு இளைஞர்கள் பலி!! (படங்கள்)

புத்தாண்டு தினமான இன்றைய தினம் கிளிநொச்சி கனகபுரம் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

தம்புள்ளையிலிருந்து மரக்கறிகளை ஏற்றி வந்த லொறி, கிளிநொச்சி கனகபுரம் பொருளாதார மத்திய நிலையத்திற்கு மரக்கறியை விநியோகித்து விட்டுத் திரும்பி வரும்போது எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியது.

இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்தில், கிளிநொச்சி உதயநகர் மேற்கைச் சேர்ந்த வரதராஜா ஜெமினன் (வயது-23) மற்றும் யாழ்ப்பாணம் செட்டியார்மடம் அராலி மேற்கைச் சேர்ந்த செல்வநாயகம் அஜிந்தன் (வயது-29) என்ற இளைஞர்களே உயிரிழந்தவர் ஆவார்.

உயிரிழந்தவர்களின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்துத் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.Previous Post Next Post