கிளிநொச்சியில் 16 வயதுச் சிறுமி! சித்தப்பா மற்றும் மூவரால் கூட்டு வல்லுறவு!! (வீடியோ)

கிளிநொச்சிப் பகுதியில் 16 வயதுச் சிறுமி ஒருவர் நான்கு பேரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி ஆனைவிழுந்தான் எட்டாம் கட்டடை பிரதேசத்தில் மாவீரரின் 16 வயது பெண் குழந்தையை சொந்த சித்தப்பா மற்றும் அவருடன்  சேர்ந்து மூன்று நபர்கள் தொடர்ந்து பாலியல் துஸ்பிரயோகம் செய்துவந்துள்ளனா்.


முன்னாள் மாவீரரின் மனைவியை யுத்தத்தில் இரண்டு கால்களையும் இழந்த முன்னாள் போராளி திருமணம் செய்துள்ளார்.

இவர் கிளிநொச்சி ஆனைவிழுந்தன் பகுதியில் துவிச்சக்கர வண்டி திருத்தும் நிலையம் ஒன்றை நடத்திவரும் நிலையில் தனது மனைவியின் பிள்ளைக்கு நடைபெறும் பாலியல் வன்கொடுமையை ஊடகங்களுக்கு தெரிவித்ததுடன் தற்போது பாட்டியுடன் வசித்துவரும் சிறுமியை சித்தப்பாவும் உறவு முறையான மேலும் மூன்று நபர்கள் தாயுடன் சேரவிடாது தடுத்து வைத்து தொடர்ந்து பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபடுத்துவதாகவும் இவர்களிடம் இருந்து சிறுமியை மீட்டு தருமறு தாயும் முன்னாள் போராளியும் கேட்டுள்ளார்கள்.
Previous Post Next Post