பிக் பாஸ் வீட்டில் ஜனனியைத் தகாத முறையில் தொட்ட அசல் கோளாறு!

பிக் பாஸ் வீட்டில் தற்போது மொத்தம் 21 போட்டியாளர்கள் இருக்கின்றனர். முதல் எலிமினேஷனாக வெளியே போக போவது யார் என்று தான் தற்போது ரசிகர்கள் விவாதித்து கொண்டிருகிறார்கள்.

மேலும் ரசிகர்களும் தற்போது தங்களுக்கு பிடித்த போட்டியாளர்களுக்கு வாக்களித்து வருகிறார்கள். வெளியே போகப்போவது யார் என வார இறுதியில் தான் தெரியவரும்.

அசல் கோளாறு தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் பெண்களிடம் எல்லைமீறுகிறார் என விமர்சனங்கள் எழுந்திருக்கிறது. மகேஸ்வரி உள்ளிட்ட பலரிடம் அவரது மோசமான செயல்களின் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் தொடர்ந்து ட்விட்டரில் வைரல் ஆகி கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இன்று அசல் கோளாறு இலங்கை பெண் ஜனனியை தகாத முறையில் முதுகில் தொட்டிருக்குறார். அந்த போட்டோவை ட்விட்டரில் பதிவிட்டு நெட்டிசன்கள் அவரை விளாசி வருகிறார்கள்.
Previous Post Next Post