யாழில் பேருந்துகளில் பயணிக்கும் இளம் பெண்களிடம் அலைபேசிகளை அபகரிக்கும் கும்பல்! ஒருவர் கைது!!

யாழ்ப்பாணத்தில் பேருந்துகளில் பயணிக்கும் இளம் பெண்களிடம் அலைபேசிகளை அபகரிக்கும் கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரிடமிருந்து 9 அலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் கூறினர். சுன்னாகத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

அச்சுவேலி, நீர்வேலி, சுன்னாகம், பலாலி உள்ளிட்ட இடங்களில் பேருந்துகளில் பயணிக்கும் இளம் பெண்களிடம் அலைபேசிகளை சந்தேக நபர் அபகரித்துள்ளார் என்று விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் தலைமை பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்சிஸின் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரே இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

அலைபேசிகளை தவறவிட்ட பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளை வழங்கியவர்கள் அலைபேசியை அடையாளம் காட்டுமாறு மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Previous Post Next Post