கொலை, கொள்ளைக் குற்றவாளிகள் இருவர் பொலிஸாரால் சுட்டுக்கொலை!

இந்தியா, டெல்லி சிறப்புப் பொலிஸ் பிரிவினரால் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய இருவர் இன்று காலை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

டெல்லி – பிஹ்லட் புர் பகுதியில் இன்று தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ் வழியாகச் சென்ற சந்தேகத்துக்கு இடமாக இருவரைப் பிடிக்க முயன்றனர்.

இதன்போது பொலிஸார் மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் செல்ல அவர்கள் முயன்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்தே பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவர்கள் இருவரும் கொல்லப்பட்டதாக டெல்லி பொலிஸ் துணை ஆணையாளர் பி.எஸ்.குஷ்வா தெரிவித்துள்ளார்.

கொல்லப்பட்டவர்கள் ராஜா குரேஷி, ரமேஷ் பகதூர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Previous Post Next Post