பிக்பாஸ் தர்ஷன் செய்த துரோகம்! காதலி பொலிஸில் பரபரப்பு புகாா்!! (வீடியோ)

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் சீசன் 3 இல் இலங்கையைச் சேர்ந்த தர்ஷன் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்திருந்தார். அத்தோடு அவர்தான் டைட்டில் வெல்வார் எனவும் கூறப்பட்டிருந்தது.

அவரது காதலி சனம் ஷெட்டி தற்போது போலீசில் ஒரு புகார் அளித்துள்ளார். தன்னை நிச்சயதார்த்தம் செய்து ஏமாற்றிவிட்டதாக அதில் கூறியுள்ளார். மேலும் தர்ஷனுக்காக தான் 15 லட்சம் ருபாய் செலவு செய்திருப்பதாக கூறியுள்ளார்.
"பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அப்ளிகேஷன் அனுப்பியதே நான் தான். விசா உள்ளிட்ட விஷயங்களுக்கு நான் 15 லட்சம் ருபாய் வரை செலவு செய்தேன். தற்போது என்னை பிடிக்கவில்லை என்கிறார். எனக்கு நடிகை வேண்டாம் என கூறுகிறார்.

அவரது நண்பர்கள் முன்னிலையில் என்னை அவமான படுத்தினார். எனக்கு மற்றவர்களுடன் தவறான தொடர்பு இருக்கிறது என்று கூட பேசுகிறார்."

"இலங்கை சென்று அவரது பெற்றோரை சந்தித்து பேசினேன். அவர்களும் உதவவில்லை. அவரது அம்மாவிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே தர்ஷன் மற்றும் அவரது நண்பர்கள் வந்து என்னை வீட்டின் கேட்டை விட்டு வெளியே தள்ளிவிட்டனர்.

தர்ஷன் என்னை மிரட்டுகிறார். நீ கேஸ் போடுவதென்றால் போட்டுக்கொள். உன்னை எப்படி சமாளிப்பது என்று எனக்கு தெரியும் என மிரட்டுகிறார்" என சனம் ஷெட்டி கூறியுள்ளார்.
Previous Post Next Post