யாழ்.பல்கலையில் பகிடிவதை! ஆளுநர் எடுக்கவுள்ள அதிரடி நடவடிக்கைகள்!!

யாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் பகிடிவதை தொடர்பான அனைத்து தகவல்களும் சமர்ப்பிக்கப்படும் போது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
(ஓடியோ)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையே இடம்பெற்ற பகிடிவதை தொடர்பில் நாம் கவனமாகவும் நுணுக்கமாகவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கின்றோம்.

எனக்குக் கிடைத்த அறிக்கையின்படி பல்கலைக்கழக நிர்வாகம் இந்த பகிடிவதையில் ஈடுபட்டோரின் விவரங்களை எடுத்துள்ளனர். பல்கலைக்கழக நிர்வாகத்தினரை நான் இன்று சந்திக்கவுள்ளேன்.

அத்தோடு அந்த மாணவர்களுக்கு எதிராக சரியான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க இருக்கின்றோம். வடக்கு மாகாண மாணவர்களது அடிப்படை உரிமைகளும் அவர்களது கல்வி நடவடிக்கைகளும் எமது ஜனாதிபதியின் உறுதுணையோடு முன்னெடுக்கப்படும்.

சீரழிந்து செல்லும் இந்தச் சமூகத்தை மீளக் கட்டியெழுப்புவதில் நாம் உறுதியாக இருக்கின்றோம் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கின்றேன்.

இந்தப் பகிடிவதை தொடர்பான அனைத்துத் தகவல்களும் சமர்ப்பிக்கப்படும் போது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

வடக்கு மாகாணத்தில் கல்வியை மேம்படுத்துவதற்கு பெற்றோரதும் ஆசிரியர்களதும் ஒத்துழப்பு எம்து அவசியமாவை. அத்தோடு ஊடகங்களும், சமூக அமைப்புக்களும் உரிய நேரத்தில் விடயங்களைச் சுட்டிக்காட்டும் போது அதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

Previous Post Next Post