அநாதரவாகத் திரிந்த பெண் சடலமாக மீட்பு!

அநாதரவாகத் திரிந்த பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியா குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்திற்கு அருகிலேயே குறித்த பெண்ணின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

பெண்ணின் சடலம் ஒன்று இருப்பதை அவதானித்த சிலர் அது தொடர்பாக வவுனியா பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

அதற்கமைய சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன், சட்ட வைத்திய பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

45 வயதுடைய பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், இவர் நீண்ட காலமாக வவுனியா நகரில் யாசகம் செய்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post