யாழ்.பல்கலை மாணவிகளை எச்சரிக்கும் ஓடியோ வெளியாகியது!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாணவிகளுக்கு ராக்கிங் என்ற பெயரில் பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிவித்த செய்திகள் இணையங்கள் மற்றும் சமூகவலைத்தளங்களில் வந்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

அத்துடன் தொலைபேசி ஊடாக மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த மாணவர்களின் புகைப்படங்களும் தொலைபேசி இலக்கங்களும் வெளியாகியிருந்தது.

இந் நிலையில் ராக்கிங் செய்தது தொடர்பில் அதிகாரிகளுக்குக் கூறினால் கடும் நடவடிக்கை எடுப்போம் என மாணவிகளை யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் எச்சரிக்கை செய்யும் ஓடியோ வெளியாகியுள்ளது.

இதேவேளை இந்த மாணவர்களின் செயற்பாடுகள் குறித்து வட மாகாண ஆளுநரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதுடன், இது தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர், அதிகாரிகளுக்கும் அறிவித்துள்ளார்.

இரண்டாவது ஓடியோ - 08.02.2020 வெளியாகியது.
Previous Post Next Post