யாழ்.பருத்தித்துறையில் முதியவரின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை, இன்பருட்டிப் பகுதியில் முதியவர் ஒருவரின் சடலம் இன்று மதியம் மீட்கப்பட்டுள்ளது.

வீட்டில் தனிமையில் வாழ்ந்து வந்த ஆறு பிள்ளைகளின் தந்தையான கதிரிப்பிள்ளை ஆனந்தசிவம் (வயது-65) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகப் பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலத்தை மீட்ட பொலிஸார் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

Previous Post Next Post