யாழ்.சென்.பொஸ்கோவின் தரம் ஒன்று மாணவர்கள் சிலர் வேறு பாடசாலைக்கு மாற்றம்!

2020 ஆம் ஆண்டு தரம் ஒன்றுக்கு யாழ்ப்பாணம் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்தில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் ஒரு தொகுதியினரை நல்லூர் ஸ்தான சி.சி.த.க. பாடசாலையுடன் இணைத்துத் தனிப் பிரிவு ஆரம்பிக்கப்படவுள்ளது.

நல்லூர் ஸ்தான சி.சி.த.க. பாடசாலையுடன் இணைக்கப்படும் இந்தப் பிரிவை யாழ்.புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலய நிர்வாகமே நிர்வகிக்கவுள்ளது.

வடக்கு மாகாணக் கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் இந்தப் புதிய நடைமுறை எதிர்வரும் 17 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

நல்லூர் ஸ்தான சி.சி.த.க. பாடசாலையில் 2020 ஆம் ஆண்டு தரம் ஒன்றுக்கு 5 மாணவர்கள் மட்டமே அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்தில் 2020 ஆம் ஆண்டு தரம் ஒன்றுக்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் ஒரு பிரிவு மாணவர்கள் நல்லூர் ஸ்தான சி.சி.த.க. பாடசாலைக்கு மாற்றப்படவுள்ளனர்.

நல்லூர் ஸ்தான சி.சி.த.க. பாடசாலையில் தரம் ஒன்றுக்கு அதிதிறன் வகுப்பறை (Smart Class Room) அமைக்கப்பட்டே இந்தச் சிறப்புப் பிரிவு ஆரம்பிக்கப்படுகின்றது.

அத்துடன் அந்த வகுப்புக்கான நிர்வாகத்தை புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலய நிர்வாகமே முன்னெடுக்கவுள்ளது.

நல்லூர் ஸ்தான சி.சி.த.க. பாடசாலையை முன்னேற்றும் வகையில் வடக்கு மாகாண கல்வி அமைச்சால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

Previous Post Next Post