மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள்! ஊடகவியலாளர்களுக்குத் தடை!! (படங்கள்)

முல்லைத்தீவு, மாங்குளம் வைத்தியசாலை வளாகத்திற்குள் மனித எச்சங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந் நிலையில் இது தொடர்பில் அகழ்வுப் பணிகளை முன்னெடுக்குமாறு முல்லைத்தீவு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

மாங்குளம் வைத்தியசாலை வளாகத்திற்குள் புனர்வாழ்வு நிலையத்திற்கான கட்டடம் அமைப்பதற்காக கண்ணிவெடி தொடர்பான அகழ்வுப் பணிகள் இடம்பெற்றிருந்தன.

அதன்போது மனித எச்சங்கள் (கை, கால்) சில மீட்கப்பட்டன. அது தொடர்பில் மாங்குளம் பொலிஸாருக்குத் அறிவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் இன்று முற்பகல் முல்லைத்தீவு நீதிவான் எஸ்.லெனின்குமார் மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் விசாரணைகளை முன்னெடுத்தார்.

மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியை அண்டிய இடங்களிலும் அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க நீதிவான் உத்தரவிட்டார். அதனடிப்படையில் பொலிஸார் முன்னிலையில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதேவேளை மாங்குளம் வைத்தியசாலை வளாகத்திற்குள் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
Previous Post Next Post