சொந்த மகளைத் துஷ்பிரயோகம் செய்த தந்தை! முல்லைத்தீவில் சம்பவம்!!

முல்லைத்தீவுப் பகுதியில் தனது சொந்த மகளை நீண்ட காலம் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான், முத்துஜயன்கட்டுப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

முத்துஜயன்கட்டுப் பகுதியில் வசித்து வரும் 42 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை, தனது மூத்த மகளான 15 வயதுச் சிறுமியை கடந்த மூன்று மாத காலமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

இது தொடர்பில் கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து, சந்தேகநபரைக் கைது செய்த பொலிஸார், முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

சந்தேகநபரை நாளை (18) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன் சிறுமி, சிறுவர் நன்நடத்தைப் பாதுகாப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post Next Post