தற்கொலைக்கு முயன்ற சனம் ஷெட்டி! தர்ஷனில் பரபரப்புப் பேட்டி!! (வீடியோ)

இலங்கையிலிருந்து பிக்பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்ட தர்ஷன் மற்றும் சனம் ஷெட்டி ஆகியோரின் பிரச்சினை பற்றி பல்வேறு விடயங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

நேற்று சனம் ஷெட்டி பேட்டி அளித்த நிலையில் இன்று தர்ஷன் தன் தரப்பு வாதத்தை பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இரண்டு மாதம் முன்பே பிரேக்கப் செய்துவிட்டேன் என கூறியுள்ளார் அவர். "அவர் என் ப்ரோபைலை பிக்பாஸ் டீமுக்கு அனுப்பியது உண்மைதான். ஆனால் அது ரிஜெக்ட் ஆகிவிட்டது.

அதன்பிறகு பிக்பாஸ் 2 புகழ் ரம்யா தான் என் ப்ரோபைலை மாடல் என கூறி அனுப்பிவைத்தார். அதன் பிறகு தான் என்னை interview க்கு அழைத்தனர். அது பற்றி சனம் ஷெட்டியிடம் கூறியபோது interview நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது என கூறாதே,  சொன்னால் என்னை தேர்ந்தெடுக்க மாட்டார்கள் என கூறினார். நானும் அவர் சொன்னதை கேட்டு நிச்சயதார்த்தத்தை மறைத்தேன்." "பிக்பாஸ் முடித்துவிட்டு வெளியில் வந்த பிறகு நான் வேறு எந்த பிக்பாஸ் பெண் போட்டியாளர்களிடமும் பேசக்கூடாது, இன்ஸ்டாகிராமில் unfollow செய்யச்சொன்னார்.

அவர் பார்ட்டியில் அவரது EX உடன் இருந்ததை என் நண்பர்கள் கூறினார்கள். பிகினியில் interview கொடுத்ததை பார்த்து ஷாக் ஆனேன். அதன்பிறகு இது செட் ஆகாது என பிரேக்கப் செய்துவிட்டேன்."

"பின்னர் என்னை பற்றி தவறாக பலரிடம் பேசியுள்ளார். நான் ஒப்பந்தமாகியிருந்த படத்தின் தயாரிப்பாளர்களிடம் சென்று என்னை பற்றி தவறாக பேசினார்."

"தற்கொலை செய்துகொள்வேன் என்று கூட மிரட்டினார். பிரச்சனை அதிகமானதால் தற்கொலை முயற்சி கூட செய்தார். என் காதல் தான் முக்கியம் என நினைத்திருந்தால் வந்து என்னிடம் பேசியிருப்பார்" என தர்ஷன் கூறியுள்ளார்.
Previous Post Next Post