யாழ்.மாநகர சபையின் உழவு இயந்திரங்களை முற்றுகையிட்ட மக்கள்! (வீடியோ)

மிருகக் கழிவுகள் கொட்டப்பட்டு வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணம் வசந்தபுரம் மக்களால் போராட்டம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், காக்கைதீவு – அராலி வீதியிலேயே இவ்வாறு மிருகக் கழிவுகள் நீண்ட காலமாகக் கொட்டப்பட்டு வருவதாகவும், இது தொடர்பில் யாழ்.மாநகர சபைக்கு தெரியப்படுத்தியும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளதாத நிலையிலேய இப் போராட்டத்தை மக்கள் முன்னெடுத்தனர்.

யாழ்.மாநகர சபையின் கழிவகற்றும் உழவு இயந்திரங்கள் அனைத்தும் போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டன.

போராட்ட இடத்துக்கு வந்த யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் பொறியியலாளர்கள் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு போடப்பட்ட கழிவுகளை உடனடியாக அகற்றுவதாகவும் தெரிவித்தனர்.

அத்துடன் இப் பகுதியில் சட்டவிரோதமாக குப்பை போடுவோரை கைது செய்வதற்காக உடனடியாக கண்காணிப்பு கமரா பொருத்துவதாகவும் உறுதி வழங்கினர்.

அதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அவ்விடத்தை விட்டுச் சென்றனர். 


Previous Post Next Post