யாழ்.சாவகச்சேரியில் கார் மோதி ஒருவர் உயிரிழப்பு! (படங்கள்)

யாழ்ப்பாணம் சாவகச்சேரிப் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இன்னொருவர் படுகாயமடைந்துள்ளார்.

சாவகச்சேரி அரசடிச் சந்தியில் இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்திலேயே வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காரும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. படுகாயமடைந்தவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Previous Post Next Post