யாழில் காணாமல் போன இளம் யுவதி! தகவல் தரக் கோரிக்கை!!

யாழ்ப்பாணம் நல்லூர், அரசடி வீதியைச் சேர்ந்த தர்மலிங்கம் திவ்ஜா (வயது-17) என்ற இளம் யுவதியைக் காணவில்லை என பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமையில் (21.02.2020) இருந்து காணவில்லை எனவும் அவர் மனநிலை குழப்பத்தில் இருந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. வீட்டிலிருந்து செல்லும் போது மஞ்சள், கறுப்பு நிற சட்டை அணிந்திருந்தார்.

இவரைக் கண்டவர்கள் கீழ்க் காணும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இத் தகவலை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து குறித்த யுவதியை கண்டுபிடிக்க உதவுமாறு கேட்டுக் கொள்கின்றோம். 

076 045 7687 / 077 015 8304 / 076 083 6690


Previous Post Next Post