யாழ்.செங்குந்த இந்துக் கல்லூரி தொடர்பில் அங்கஜன் குழுவினர் ஆராய்வு! (படங்கள்)

யாழ்ப்பாணம் செங்குந்த இந்துக் கல்லூரியில் நீண்ட காலமாக நிலவி வந்த பிரச்சினைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தலைமையிலான குழுவினர் ஆராய்ந்துள்ளனர்.

குறித்த பாடசாலைக்கு நேரில் விஜயம் மேற்கொண்ட குழுவினர் அங்கு நிலவிய விளையாட்டு மைதானம் மற்றும் ஆசிரியர் இடமாற்றம் தொடர்பான பிரச்சினைகளை ஆராய்ந்து நிரந்த தீர்வினை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அப் பகுதி மக்களாலும்இ இளைஞர்களாலும் கனடா பழைய மாணவர்களாலும் ஜனாதிபதியிடம் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து ஜனாதிபதியின் பணிப்பின் பேரிலேயே குறித்த குழுவினர் பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

இதில் தவறான ஆசிரியர் இடமாற்றங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பாடசாலையும் நொதேண் விளையாட்டுக் கழகமும் பல தசாப்தங்களாக புரிந்துணர்வுடன் பயன்படுத்திவந்த விளையாட்டு மைதானக் காணி ஸ்ரீ நல்லை சட்டநாதர் ஆலயத்துக்குச் சொந்தமானது. இதற்கான குத்தகை உடன்படிக்கை 1983 ஆம் ஆண்டுடன் காலாவதியாகி விட்டது.

ஆலயத்தினர், கல்வித் திணைக்களத்தினர், நொதேண் விளையாட்டுக் கழகத்தினர் உள்ளடங்கலான முத்தரப்பினர் கொண்டதாக காலாவதியான குத்தகை உடன்படிக்கையினை மீளப் புதுப்பிப்பதாகவும் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இவ் விஜயத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தலைமையிலான உயர் கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.Previous Post Next Post