யாழில் தங்கியிருக்கும் சீனர்கள்! பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்ப மறுக்கும் பெற்றோர்கள்!!

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா வைரஸின் தாக்கத்துக்கு மத்தியில் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மக்கள் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் மக்களின் அன்றாட செயற்பாடுகளில் தொய்வு நிலை ஏற்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க பாடசாலைக்கு அருகில் சீனர்கள் தங்கியிருக்கின்றனர் என்ற காரணத்தால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பத் தயக்கம் காட்டி வருகின்றனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் தென்மராட்சிக் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கற்கும் பிள்ளைகளின் பெற்றோர்களே இவ்வாறு தயக்கம் காட்டு வருகின்றனர்.

தென்மராட்சியில் தண்ணீர்க் குழாய்கள் பொருத்தும் பணியில் சீனர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் அங்குள்ள பாடசாலைக்கு அருகில் தனியார் கட்டடத்தில் தங்கி நின்று பணிபுரிந்து வருகின்றனர்.

தற்போது கொரோனா வைரஸ் சீனாவில் பலரது உயிர்களைப் பறித்து பீதியை ஏற்படுத்தியுள்ள நிலையில் சீனர்கள் அந்தப் பாடசாலைக்கு அருகில் இருப்பதனால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post Next Post