மண்டைதீவில் மக்கள் பணத்தை வீண் விரையம் செய்த அரச உத்தியோகத்தர்கள்! (வீடியோ)

மண்டைதீவுப் பிரதேசத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு வேலணை பிரதேச செயலகத்தினால் உருவாக்கப்பட்ட கடற்கரை சுற்றுலா மையம் தற்போது செயலிழந்து காணப்படுகின்றது.
இத் திட்டத்திற்கென செலவழிக்கப்பட்ட கோடிக்கணக்காக மக்கள் பணம் தாரைவார்க்கப்பட்டுள்ளதாக வேலணை பிரதேச சபையின் உறுப்பினர் சுவாமிநாதன் பிரகலாதன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அத்துடன் இத் திட்டத்துக்கென எவ்வாறு மக்கள் பணம் வீண் விரையம் செய்யப்பட்டுள்ளது என்பது தொடர்பிலும், இந்த கடற்கரை சுற்றுலா மையம் இயங்குநிலை அற்றுக் கிடப்பதற்கு என்ன காரணம் என்பது தொடர்பிலும் பிரதேச சபை உறுப்பினர் சுவாமிநாதன் பிரகலாதன் விளக்கமளித்துள்ளார்.

இதேவேளை நேற்றைய தினம் யாழ்.மாவட்ட செயலகத்தில் பிரதேச சபை உறுப்பினர்களுக்கு நடைபெற்ற சுற்றுலாத்துறை மேம்படுத்தல் தொடர்பான பயிற்சி பட்டறையில் மண்டைதீவு கடற்கரை சுற்றுலா மையம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous Post Next Post