மரண அறிவித்தல் - நமசிவாயம் தில்லைவாசன்

மரண அறிவித்தல் - நமசிவாயம் தில்லைவாசன்
(முன்னாள் ஊழியர், மானிப்பான் பரிஷ் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம்)

மண்டைதீவு 06 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் உடுவில் தெற்கு, யாமாச்சந்தி மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட நமசிவாயம் தில்லைவாசன் 07.02.2020 வெள்ளிக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான நமசிவாயம் மகாலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணவதிப்பிள்ளை மற்றும் அன்னபூபதி தம்பதிகளின் மருமகனும், சிவகுமாரியின் அன்புக் கணவரும்,

கைலாசவாசன், ரஞ்சினிதேவி, சிறிகந்தவாசன் ஆகியோரின் சகோதரரும், திவ்யா (சுகாதார அமைச்சு, வடமாகாணம்), யனார்த்தனன் (ஜேர்மன்), மிதுஷா (யாழ்.பல்கலைக்கழகம்), கரிகரன், திவ்யரஞ்சித் (கல்வியற் கல்லூரி, வட்டானைச்சேனை) ஆகியோரின் பாசமிகு தந்தையும், வைகுந்தனின் (கனடா) மாமனாரும்,

சிவபாலன் (ஜேர்மனி), காலஞ்சென்ற இராமநாதன், சந்திரலோகா, காலஞ்சென்ற விநோதினி, வதனி, சாந்தி, கமலாதேவி, கோகிலவதனி, செல்வகுமார், தர்மகுலராசா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 09.02.2020 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு அன்னாரின் குடும்பத்தினர் கேட்டுக் கொள்கின்றனர்.


உடுவில் தெற்கு,                                                                                   +94 77 883 6860
யாமாச் சந்தி,
மானிப்பாய்.

பாா்வைகள்,
hitwebcounter
Previous Post Next Post