இணைய ஊடகம் ஒன்றுக்கு எதிராக சட்டத்தரணிகள் போராட்டம்!

போலியான, உண்மைப்புக் புறம்பான செய்தியை வெளியிட்டு நீதிமன்ற பதிவாளருக்கும் உத்தியோகத்தர்களுக்கும் அவதூறு பரப்பிய ஊடகங்களுக்குக் கண்டனம் தெரிவித்து கிளிநொச்சி நீதிமன்றின் சட்டத்தரணிகள் இன்று சேவைப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

உண்மைக்குப் புறம்பான செய்தியை வெளியிட்டமைக்கு சம்பந்தப்பட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியே கிளிநொச்சி நீதிமன்ற சட்டத்தரணிகள் சேவைப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்ட நீதிபதிக்கு அறிவித்து விட்டு இந்த சேவைப் புறக்கணிப்பில் சட்டத்தரணிகள் ஈடுபட்டுள்ளதால் நீதிமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி நீதிமன்ற சான்று பொருளான மணல் பதிவாளரினால் மோசடியாக விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று அடிப்படை நடைமுறைக்கு புறம்பாகவும் அவருக்கும் நீதிமன்ற உத்தியோகத்தர்களுக்கும் அவதூறு ஏற்படுத்தும் வகையில் இணைய ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

நபர் ஒருவரின் தூண்டுலால் இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளமை தொடர்பில் சம்பந்தப்பட்ட ஊடகங்களை விசாரணைக்கு உட்படுத்தி பின்னணியில் இருப்பவர் கண்டறியப்பட்டு தண்டனைக்குட்படுத்த வேண்டும் என்று கிளிநொச்சி நீதிமன்ற சட்டத்தரணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Previous Post Next Post