பிறந்தநாளுக்கு அழைக்காததால் நடந்த களோபரம்! இருவர் வைத்தியசாலையில்!!

யாழ்ப்பாணத்தில் நடந்த அடிதடி சம்பவம் ஒன்றில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிறந்தநாள் நிகழ்வுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று தெரிவித்தே இந்த அடிதடி இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தென்மராட்சி கொடிகாமம் பழையவாய்க்கால் மிருசுவில் பகுதியில் நேற்று இரவு 11.30 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவமானது பிறந்தநாளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்ற காரணத்தினால் உறவுகளுக்கிடையில் இடம்பெற்றுள்ளது.

இதில் செல்லத்துரை சுப்பிரமணியம் (வயது-66), சுப்பிரமணியம் லிந்துஜன் (வயது-23) ஆகிய இருவரும் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Previous Post Next Post