தற்கொலைகளால் திணறுகிறது யாழ்.குடாநாடு! (புள்ளி விபரம் இணைப்பு)

யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலமாக இளவயதினர்களின் தற்கொலைகள் அதிகரித்துக் காணப்படுகின்றது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த வருடம் இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றார்கள் என குறிப்பிட்டு 612 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் வைத்தியசாலை வட்டாரங்களினால் வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களின் படி,

கடந்த நான்கு வருடங்களில் 2019 ஆண்டில் உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றவர்களின் எண்ணிக்கை யாழில் அதிகரித்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு சற்றே குறைந்துள்ளது.

2016 ஆம் ஆண்டில் 578 பேர் இவ்வாறு உயிரை மாய்க்க முயன்றுள்ள நிலையில் அவர்களில் 110 பேர் உயிரிழந்துள்ளனர்.

2017 ஆம் ஆண்டில் 579 பேர் உயிரை மாய்க்க முயன்று 59 பேர் உயிரிழந்தனர்.

2018 ஆம் ஆண்டு 582 பேர் உயிரை மாய்க்க முயன்று 150 பேர் உயிரிழந்தனர்.

2019 ஆம் ஆண்டு 612 பேர் உயிரை மாய்க்க முயன்று 105 பேர் உயிரிழந்தனர்.

தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொள்ள முயல்பவர்களிற்கு பல்வேறு விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றபோதும் ஆலோசனை மையங்கள் செயற்பட்டு வருகின்ற போதிலும் தவறான முடிவெடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வது கவலைக்குரியதாகும்.

Previous Post Next Post