இலங்கையை புரட்டிப் போட ஆரம்பித்தது கொரோனா! 103 பேர் வைத்தியசாலையில்!!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் காரணமாக 103 பேர் வைத்தியசாலைகளில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

ஒரு வெளிநாட்டவர் மற்றும் 5 இவங்கையர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இன்று மார் 14 ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 10 மணி வரையான தகவல்களின் அடிப்படையில் சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யாழ்.போதனா வைத்தியசாலையில் 02 பேர், தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் 35 பேரும் (ஒரு வெளிநாட்டவர் உட்பட), தேசிய வைத்தியசாலையில் ஒருவரும், ராகம போதனா வைத்தியசாலையில் 6 பேரும் (ஒரு வெளிநாட்டவர் உட்பட), ஹராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் 8 பேரும், அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் 3 பேரும், குருணாகல போதனா வைத்தியசாலையில் 16 பேரும்,

கண்டி தேசிய வைத்தியசாலையில் 4 பேரும் (ஒரு வெளிநாட்டவர் உட்பட), மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒருவர், ஹம்பகா மாவட்ட பொது வைத்தியசாலையில் 13 பேரும், நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் 6 பேரும், இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் 3 பேரும், பதுளை மாகாண பொது வைத்தியசாலையில் 2 பேரும், லேடி ரிஜ்வெய் சிறுவர் வைத்தியசாலையில் 3 பேரும் என 103 பேர் கொரோனா அறிகுறிகள் காரணமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.


Previous Post Next Post