கட்டுக்கடங்காது அதிகரிக்கும் கொரோனா! பாதிப்பு 28 ஆக உயர்வு!!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஆறு பேர் இன்று (16) திங்கட்கிழமை இரவு அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் 212 கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் வைத்தியசாலைகளில் கண்காணிக்கப்படுகின்றனர். அத்துடன் மட்டக்களப்பு, வவுனியா உள்ளிட்ட 10 தடுப்பு நிலையங்களில் 2 ஆயிரம் பேர் தங்க வைத்து கண்காணிக்கப்படுகின்றனர்.

Previous Post Next Post