இன்று கலைக்கப்படுகிறது நாடாளுமன்றம்! யாழ்.மாநகர சபை முதல்வர் அதிரடி அறிவிப்பு!!

இன்று நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ள நிலையில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கத் தான் தயார் என யாழ்.மாநகர சபை முதல்வர் இமானவேல் ஆர்னோல்ட் அறிவித்துள்ளார்.

இன்று யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மாகாண சபை உறுப்பினராக இருந்தபோது அதனை இராஜினமாச் செய்து விட்டு மாநகர சபை தேர்தலில் போட்டியிட்ட ஆர்னோல்ட் முதல்வராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post