கொரோனா சந்தேகம்! லண்டனிலிருந்து யாழ்.வந்தவர் வைத்தியசாலையில்!!

லண்டனில் இருந்து வந்த வயோதிபப் பெண் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதிதயை சேர்ந்த 73 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவர் அண்மையில் லண்டன் நாட்டிலிருந்து வருகை தந்துள்ளார்.

அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் பரிசோதனை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் தனக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்ற அச்சத்தில் அவரது உறவினர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று காலை அனுமதித்துள்ளனர்.
Previous Post Next Post