பொது இடத்தில் மக்கள் கூடுவதற்கும், நிகழ்வுகள் நடாத்துவதற்கும் தடை விதிப்பு!

கொரோனா பாதிப்பு இலங்கையில் ஏற்பட்டதையடுத்து பொது நிகழ்வுகள், கூட்டங்கள் நடத்துதல் மற்றும்  பொது இடங்களில் மக்கள் அதிகமாகக் கூடுவதை இரண்டு வாரங்களுக்கு பொலிஸார் தடை விதிப்பார் என்று சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராட்சி தெரிவித்தார்.

பொது நிகழ்வுகள், விழாக்கள், கூட்டங்களை ஏற்பாடு செய்தல்,  பொது இடங்களில் மக்கள் கூடுதல் என்பன அடுத்துவரும் இரண்டு வாரங்களுக்கு கட்டுப்படுத்தபடும்.

அதனால் மேற்படி நிகழ்வுகளை நடத்துவது தொடர்பில் பொலிஸாரின் அனுமதி கோரப்படுவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கபப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

கொழும்பில் இன்று மாலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.


Previous Post Next Post